யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் மூத்த அருட் பணியாளர்களில் ஒருவரும், சிறந்த கல்விமானுமாகிய அருட்பணி அல்ஸ்ரன் மதுரநாயகம் அடிகளார் 28.07.2010 அன்று கொழும்பில் காலமானார். 31.07.2010 அன்று யாழ்ப்பாணம் தூய மரியன்னை பேராலயத்தில் இறுதி வழிபாடுகள் நடைபெற்றன. அருட்பணி அல்ஸ்ரன் மதுரநாயகம் அடிகளார் பல கத்தோலிக்க கல்லூரிகளின் அதிபரா கவும், கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.
01.08.2010
மடுமாதா திருவிழா
இலங்கையின் ஆன்மீக, வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா திருவிழா நேற்று (23.06.2010) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பெருந்தொகையான மக்கள் இவ்ஆயத்த வழிபாட்டில் கலந்துகொண்டனர். 23.06.2010 தொடக்கம் 02.07.2010 வரை இத்திருவிழா நடைபெறும். தினமும் மாலை 6.30 மணிக்கு ஆயத்த வழிபாடுகள் நடைபெறும். 01.07. 2010 மாலை சிறப்பு நற்கருணை வழிபாடு (வேஸ்பர்) இடம் பெறும். 02.07.2010 காலை திருநாள் கூட்டுத் திருப்பலி தமிழ், சிங்களம் மற்றும் திருச்சபையின் தாய்மொழியாம் இலத்தீன் மொழிகளிலும் ஒப்புக்கொடுக்கப்படும்.
தமிழில் ஆயத்த வழிபாட்டு மறையுரையை அருட்பணியாளர்கள் பி.கிறிஸ்துநாயகம், அ.யூட் குரூஸ், டே.அலக்சாண்டர் சில்வா, பி.றெஐினோல்ட் ஆகியோரும்: சிங்களத்தில் அருட்பணியாளாகள் அஐந்த லக்சிறி அ.ம.தி, லயலி அ.ம.தி ஆகியோரும் வழங்குகின்றனர். திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையோடு திருமலை மட்டுநகர் மறைமாவட்ட இணை ஆயர் பேரருட் கலாநிதி பொன்னையா யோசேப்பு ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி வியான்னி பெனாண்டோ ஆண்டகை ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுக்கின்றனர்.
24.06.2010
புதிய அருட்பணியாளர்களை வாழ்த்துகின்றோம்.
அண்மையில் நம் நாட்டில் குருக்களாகத் திருநிலப்படுத்தப்பட்ட புதிய குருக்கள்.
இவர்கள் அனைவரையும் சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் அன்போடும், பெருமகிழ்ச்சியோடும் வாழ்த்தி நிற்கின்றது.
24.05.2010
தூய அந்தோனியாரின் திருப்பண்டம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
பாதுவா நகரிலிருந்து தூய அந்தோனியாரின் திருப்பண்டம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. கொழும்புப் பேராயர் அதி வந்தனைக்குரிய மல்கம் றஞ்சித் ஆண்டகை அவர்களின் ஒழுங்கமைப்போடு பாதுவா நகரிலிருந்து தூய அந்தோனியாரின் திருப்பண்டம் (அருட்பொருட்கள்) இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாண்டு பங்குனித் திங்கள் 05ம் நாள் தொடக்கம் 18ம் நாள்வரையிலுள்ள காலப் பகுதியில் இலங்கையின் பல மறைமாவட்டங்களுக்கும் தூய அந்தோனியாரின் அருட்பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இலங்கை மக்கள் தூய அந்தோனியாரின் அருட்பொருட்களைப் பார்க்கும் அரிய பேற்றினை இதன் மூலம் பெற்றுக் கொள்ளுகின்றனர். இவ்வாண்டு 175ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கொழும்பு கொச்சிக்கடை தூய அந்தோனியாரின் ஆலயத்திற்கு எடுத்துவரப்படுகின்றது.அதன் பின் கீழ்வரும் ஒழுங்கமைப்பில் இலங்கையின் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.
நிகழ்ச்சி நிரல்.
05.03.2010பாதுவா நகரிலிருந்து எடுத்துவரப்படும் தூய அந்தோனியாரின் அருட்பொருட்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நியைத்திலிருந்து கொழும்பு கொச்சிக்கடை தூய அந்தோனியாரின் ஆலயத்திற்கு எடுத்துவரப்படும். 10.03.2010 காலி மறைமாவட்டப் பேராலயத்திற்கு. 11.03.2010 பண்டாரவளை தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 12.03.2010 மட்டக்களப்பு தூய அந்தோனியார் பேராலயத்திற்கு. 13.03.2010 அனுராதபுரம் பேராலயத்திற்கு 13.03.2010 மதவாச்சி ஆலயத்திற்கு.(இங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு) 14.03.2010 யாழ்ப்பாணம்: மானிப்பாய் தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 15.03.2010 மன்னார் தள்ளாடி தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 16.03.2010 கொட்டப்பிட்டிய தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 16.03.2010 குருநாகல் : பள்ளந்தெனிய தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 17.03.2010 கண்டி தூய அந்தோனியார் பேராலயத்திற்கு. 17.03.2010 லயனகெமுல்ல தூய அந்தோனியார் ஆலயத்திற்கு. 18.03.2010 மீண்டும் பாதுவா நகரிற்கு.
26.01.2010
திருத்தந்தையின் பிரதிநிதி மன்னார் மறைமாவட்டத்திற்கு வருகை .
திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பரின் இலங்கைக்கான பிரதிநிதி அதி மேன்மைமிகு பேரருட் கலாநிதி யோசப் ஸ்பிரித்தி ( 2010.01.08) வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை மன்னார் பிரதான பாலத்தடியில் வைத்து மன்னார் மக்கள் வரவேற்று ஊர்வலமாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் நேற்று மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள பிரமாண்டமான வழிபாட்டு மண்டபத்தினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இரா.யோசேப்பு ஆண்டகையோடு இணைந்;து ஆசீர்வதித்து திறந்து வைத்தார். அதன்பின் நடைபெற்ற நற்கருணை வழிபாட்டிலும், கலைநிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் பெருந் தொகையான குருக்கள், துறவிகள், இறைமக்கள் கலந்து கொண்டனர்.
அதி மேன்மைமிகு பேரருட் கலாநிதி யோசப் ஸ்பிரித்தி இன்று காலை (2010-01-09) தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்த பின் பேசாலை, தோட்டவெளி ஆகிய பங்குகளுக்குச் சென்றார். இன்று மதியம் அவர் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் , துறவிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். அவர் இன்று மாலை வன்னிப் பகுதிக்கச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தார்
09.01.2010
தேர்தல் விழுமியங்கள் பற்றிய சிறந்ததோர் அறிவூட்டலை
இலங்கையில் இம்மாதம் ஐனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மக்களுக்கு தேர்தல் விழுமியங்கள் பற்றிய சிறந்ததோர் அறிவூட்டலை வழங்கும் நல்லதோர் முயற்சியில் அருட்பணி றோகான் டீ சில்வா தலைமையில் குருக்கள், ஆண் - பெண் துறவிகள் , பொதுநிலையினர் அடங்கிய குழுவொன்று ஈடுபட்டுள்ளனர். மேலும் இக் குழவினர் தேர்தல் பற்றி விழுப்புணர்வை ஏற்படுத்த பங்குகளுக்கு சுற்றுமடல் அனுப்பும்படியும் இலங்கை ஆயர்களிடம் வினயமாகக் கேடடுள்ளனர்.
08.01.2010
அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 25ம் ஆண்டு நினைவு
அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 25ம் ஆண்டு நினைவு தினம்.
மன்னார் மறைமாவட்டம் வங்காலை புனித அன்னம்மாள் பங்கில் பணியாற்றும் வேளையில் இராணுவத்தால் 1985ம் ஆண்டு தை மாதம் 06ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 25ம் ஆண்டு நினைவு தினம் நேற்று (2010.01.06) வங்காலையில் நினைவு கூரப்பட்டது. இன்று காலை மன்னார் ஆயர் பேரருட்திரு இரா.யோசேப்பு ஆண்டகை அவர்களினால் நினைவுத் திருப்பலி வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியின் முடிவில் பங்குத் தந்தை அருட்பணி சூ.அ.கி.nஐயபாலன் குரூஸ் அடிகளாரின் தலைமையில் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் நினைவுச் சிலைக்கு முன்பாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அன்னாரின் பணிவாழ்வு , அர்ப்பணம் , ஏழைகள் மீது அவர் காட்டிய கரிசனை, நீதியின் மேல் அவர் கொண்டிருந்த தணியாத தாகம் பற்றி பலரும் எடுத்துரைத்தனர். இந் நிகழ்வின்போது நினைவுச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் கனடாவில் வசிக்கும் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் தாயாரும் , சகோதரரும் ,சகோதரியும் கலந்து கொண்டனர். அத்தோடு மன்னார், யாழ்ப்பாணம் ,கொழும்பு ஆகிய மறைமாவட்டங்களிலிருந்து பல குருக்களும் , துறவிகளும் கலந்து கொண்டனர்.