Javascript DHTML Tree Menu Powered by dhtml-menu-builder.com  
   
Article News
---------------
சுவிஸ்
நம்நாடு
வத்திக்கான்
உலகம்
இன்று
 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

அருட்பணி விக்ரர் ஞானப்பிரகாசம் அ.ம.தி அடிகளார் புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் நாட்டில் அருட்பணியாற்றும் இலங்கையரான அருட்பணி விக்ரர் ஞானப்பிரகாசம் அ.ம.தி அடிகளார் அந்நாட்டுத் திருச்சபையின் கியூற்றா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக  திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அவர் களால் இவ்வாண்டு சித்திரைத் திங்கள் 29ம் நாள் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆயரைத் திருநிலைப்படுத்தும் நிகழ்வு 2010.07.16ம் திகதியன்று பாக்கிஸ்தான் தலைநகரமான கராச்சி புனித பத்திரிசியார் பேராலயத்தில் இடம் பெறும்.

பேரருட்திரு விக்ரர் ஞானப்பிரகாசம் அ.ம.தி ஆண்டகை யாழ்ப்பாணம் பாசையூர் தூய அந்தோனியார் ஆலயப் பங்கைச் சேர்ந்தவர். 1940ம் ஆண்டு கார்த்திகை 21ம் நாள் பிறந்த இவர் 1959ம் ஆண்டு அ.ம.தி. சபையில் இணைந்து கொண்டார். 1960 -1966 ஆண்டுகளில் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் மெய்யியல், இறையியல் கல்வியைக் கற்றார்.1963ம் ஆண்டில் நித்திய அர்ப்பணத்தை எடுத்துக்கொண்டார். 1966 மார்கழி 21ம் நாள் குருவாக மறைந்த ஆயர் பேரருட்திரு எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை அவர்களால் அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

அதன்பின் 1967 – 1969ம் ஆண்டுகளில் திருகோணமலை உதவிப் பங்குப் பணியாளராகவும், 1969 – 1973 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் அ.ம.தி. சபையின் மறையரையாளர் குழுவிலும் பணியாற்றியபின் பாக்கிஸ்தான் மண்ணில் மறைப்பலியாற்ற அனுப்பிவைக்கப்பட்டார்.

புதிய ஆயர் பேரருட்திரு விக்ரர் ஞானப்பிரகாசம் அ.ம.தி ஆண்டகை அவர்களை சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், சுவிஸ் தமிழ் கத்தோலிக்க மக்களோடு இணைந்து வாழ்த்துகின்றது.

07.07.2010
எங்கள் அவலம் தொடர்கின்றது

எங்கள் அவலம் தொடர்கின்றது , உறக்கமில்லை ,போதிய உதவியில்லை: எங்களுக்கு உதவுங்கள். என அண்மையில்; ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கெயிற்றியில் மனித நேயப் பணியாற்றி வரும் சலேசியன் சபை அருட்சகோதரி மரியா சில்விற்றா எல்யி உலக மக்களுக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

02.02.2010
உலகிலேயே வயது குறைந்த முதல் பேராயர்
எச் சந்தர்ப்பத்திலும் நாம் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என ஈரான் நாட்டுக் கத்தோலிக்க திருச்சபையின் புதிய பேராயர் அதி மேன்மை மிகு எமில் சாமவுன் நோநா ஆண்டகை அந் நாட்டுக் கத்தோலிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு 10 நாட்களின் பின் மரணமான பேராயர் அதி மேன்மை மிகு பவுலோ பராஐ றாகோ ஆண்டகைக்குப் பதிலாக தெரிவு செய்யப்பட்ட இப் பேராயர் அவர்கள் 42 வயது டையவர். உலகிலேயே வயது குறைந்த முதல் பேராயர் இவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
02.02.2010
கெயிற்றியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பேராயர் மரணம்.

கெயிற்றியில் இம்மாதம் 12ம் திகதி செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 63 வயதான கெயிற்றி நாட்டின் பேராயர் அதி மேன்மைமிகு யோசேப் சேர்கே மீஒற் ஆண்டகை அவர்களும் அடங்குகின்றார். நிகழ்வொன்றிற்கு வருகைதரவிருந்த விருந்தினரை வரவேற்பதற்காக மாடி முகப்பு வரவேற்பு மண்டபத்தில் நின்றுகொண்டிருந்த போது நில நடுக்கம் ஏற்பட்டது. இவ் வேளையில் இந் நில நடுக்கத்தினால் பேராயர் அவாகள் தூக்கி எறியப்படதினால் மரணமடைந்ததாக கெயிற்றிக்கான திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர் அதி மேன்மைமிகு பெர்னாடிற்றோ அவுசா தெரிவித்தள்ளார். பேராயர் அதி மேன்மைமிகு யோசேப் சேர்கே மீஒற் ஆண்டகை அவர்கள் கெயிற்றியின் போர்ட் அவ் பிறின்ஸ் என்னும் பேராயர் மறைமாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.கெயிற்றி கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி சமாதானப் பிரிவிற்கு நீண்ட காலமாகப்
பொறுப்பாக இருந்து கெயிற்றி மக்களின் துயர் துடைத்தவர் இப்பேராயர் அவர்கள்.

அத்தோடு 85 வயதான கெயிற்றியின் முதல் சலேசியன் சபை அருட்சகோதரர் கியுபேட் சானோன் அவர்களும் இந் நில நடுக்கத்தில் கொல்லப்பட்டார்.சிறந்த கல்விமானான இவர் கெயிற்றியில் அமைந்துள்ள சலேசியன் துறவற சபையின் உயர்கல்வி நிலையத்தில் பணியாற்றி பல மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கியுள்ளார்.

 

 

15.01.2010
. புற்றுநோயாளி அருளாளர் அன்னை மக்கிலோப் அவர்களின் பரிந்துரையால் அற்புதமாகக் குணமடைந்தார்.

17 வருடங்களாக குணமாக்க முடியாது என்று கைவிடப்பட்ட புற்றுநோயாளி ஒருவர் jesusscars-1[1].jpgஇவ்வாண்டு உரோமாபுரில் புனிதராக அறிவிக்கப்படவிருக்கும் அருளாளர் அன்னை மக்கிலோப் அவர்களின் பரிந்துரையால் அற்புதமாகக் குணமடைந்தார். அவுஸ்திரேலியா நாட்டின் சிண்டாலே என்ற இடத்தைச் சேர்ந்த 66 வயதான என்னும் பெண்மணி 1993ம் ஆண்டு தொடக்கம் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். இவ் அற்புதத்தை  இம் மாதம் 11ம் திகதி அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி என்னும் இடத்தில் அமைந்துள்ள அருளாளர் அன்னை மேரி மக்கிலோப் நினைவுச் சிற்றாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கத்லீன் இவான் வெளிப்படுத்தியுள்ளார்.

கத்லீன் இவான் தன் வாழ்க்கையை இவ்வாறு விபரிக்கின்றார்: நான் என்னுடைய 16வது வயது முதல் புகைபிடிக்கம் பழக்கத்தைக் கொண்ருந்தேன். 1990ம் ஆண்டு அப் பழக்கத்தினைக் கைவிட்டேன். மூன்று ஆண்டுகளின் பின்னர் எனக்கு வலது பக்க ஈரலில் புற்றுநோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. இது உடலின் பல பாகங்களுக்கும் விரைவாகப் பரவியது. சில மாதங்களின் பின்னர் மூளையில் இன்னொரு கட்டி இருப்பதாக வைத்தியர்கள் கூறினார்கள். ஆனால் எனக்கு அளிக்கப்பட்ட எல்லாச் சிறப்பு சிகிச்சைகளும் பயனற்றுப் போயின. நான் தொடந்து வாழக்கூடிய கால எல்லை இரண்டு மாதங்கள்தான் என திட்டமாக வைத்தியர்கள் கூறிவிட்டார்கள். நான் வழக்கமாக ஆலயம் செல்லுவேன். முழந்தாட் படியிட்டு செபிப்பதைப்பற்றியோ அல்லது திருப்பலின் மேன்மை பற்றியோ நான் எனது கடந்தகால வாழ்க்கையில் அதிக நாட்டம் கொள்ளவில்லை.ஆனால் நான் செபத்தில் ஆழமான விசுவாசம் கொண்டவள், ஆகவே கடவுளிடமே எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தேன். அதன் பின் தொடர்ந்து வந்த நாட்கள் எனக்கு மிகவும் வேதனையான நாட்களாக அமைந்தன. படுக்கையைவிட்டு ஒரு கணமேனும் எழுந்திருக்கவோ அசையவோ முடியவில்லை. எனது கணவரே எனக்கு எல்லாவிதத்திலும் உதவி புரியவேண்டியிருந்தது. இந் நேரத்தின் எனது நண்பரொருவர் அருளாளர் அன்னை மக்கிலோப் அவர்களின் படத்தையும் ஒட்டிய துணியையும் அங்கு அச்சிடப்பட்ட செபத்தினையும் புனித சூசையப்பர் சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகளிடமிருந்து பெற்றுத் தந்தார். இரண்டு வாரங்கள் களித்து தியானமொன்றில் பங்கு பற்றினேன்.  10 மாதங்கள் கழித்து என்னைப் பரிசோதித்த வைத்தியர்கள் என்னிடம் புற்று நோய்க்கான அடையாளங்களோ அல்லது அறிகுறிகளோ இல்லை என்று ஆச்சரியத்துடன் கூறினர். ஆகவே இது அன்னை மக்கிலோப் மூலமாக ஆண்டவா என்னைக் குணப்படுத்தியுள்ள மாபெரும் அற்புதமாகும்.

13.01.2010
பல கத்தோலிக்க, கிறிஸ்தவ ஆலயங்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டுள்ளன

மலேசியாவில் மேலும் பல கத்தோலிக்க, கிறிஸ்தவ ஆலயங்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்க ஆலயங்களான நல்லாயன் ஆலயம், புனித லூயிஸ் ஆலயம் , மற்றும் அருட்சகோதரிகளின் இல்லம் கத்தோலிக்க பாடசாலை என்பனவும் கிறிஸ்தவர்களின் ஆலயமான அனைத்துப் புனிதர் ஆலயம் போன்றன தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.
இத்தாக்குதல் பற்றிக் கருத்துத் தெரிவித்த கத்தோலிக்க அருட்பணியாளர் ஒருவர்: நாங்கள் அமைதியை விரும்பும் மக்கள் , தவறிழைத்தவர்களைத் தண்டியுங்கள் என்றும் கேட்கவில்லை. நூங்கள் எங்கள் ஆலயத்தில் ஒன்றுகூடி அமைதிக்காகச் செபித்துக்கொண்டிருக்கின்றோம்.

download

11.01.2010
மலேசியாவில் கத்தோலிக்க, கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன.

மலேசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோலாலம்பூரில் கத்தோலிக்க, கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது. கோலாலம்பூரில இருந்து வெளிவரும் கத்தோலிக்க நாளேடொன்று மலே மொழியில் கடவுளைக் குறிக்க அல்லா என்னும் பதத்தைப் பயன்படுத்தியிருந்தது. இதனை அந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் எதிர்த்தனர். அல்லா இப் பதம் முஸ்லிம்களுக்கு மாத்திரமே உரியது அதனை வேறு எம் மதத்தினரும் பயன் படுத்தக்கூடாது எனப் பேராட்டம் நடாத்தினர். மலேசிய அரசும் இதனை ஆதரித்து முஸ்லிம்கள் தவிர்ந்த எவரும் அல்லா என்னும் பதத்தைப் பயன் படுத்தக் கூடாதென தடைவிதித்தது. இவ் விடயம் நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது. கடந்த 2009.12.31 அன்று அந் நீதிமன்றம் கடவுளைக் குறிக்கும் அல்லா என்னும் பதம் ஒரு மதத்திற்கு மாத்திரம் உரியதொன்றல்ல. அதனை யாரும் பயன்படுத்தலாம் என்னும் தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து  கத்தோலிக்க, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் நான்கு தேவாலயங்கள் சேதமடைந்துள்ளன.

10.01.2010
  Records 1 to 7 of 7
Copyright 2004 - 2010