மலேசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோலாலம்பூரில் கத்தோலிக்க, கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது. கோலாலம்பூரில இருந்து வெளிவரும் கத்தோலிக்க நாளேடொன்று மலே மொழியில் கடவுளைக் குறிக்க அல்லா என்னும் பதத்தைப் பயன்படுத்தியிருந்தது. இதனை அந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் எதிர்த்தனர். அல்லா இப் பதம் முஸ்லிம்களுக்கு மாத்திரமே உரியது அதனை வேறு எம் மதத்தினரும் பயன் படுத்தக்கூடாது எனப் பேராட்டம் நடாத்தினர். மலேசிய அரசும் இதனை ஆதரித்து முஸ்லிம்கள் தவிர்ந்த எவரும் அல்லா என்னும் பதத்தைப் பயன் படுத்தக் கூடாதென தடைவிதித்தது. இவ் விடயம் நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது. கடந்த 2009.12.31 அன்று அந் நீதிமன்றம் கடவுளைக் குறிக்கும் அல்லா என்னும் பதம் ஒரு மதத்திற்கு மாத்திரம் உரியதொன்றல்ல. அதனை யாரும் பயன்படுத்தலாம் என்னும் தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் நான்கு தேவாலயங்கள் சேதமடைந்துள்ளன.
|