17 வருடங்களாக குணமாக்க முடியாது என்று கைவிடப்பட்ட புற்றுநோயாளி ஒருவர் இவ்வாண்டு உரோமாபுரில் புனிதராக அறிவிக்கப்படவிருக்கும் அருளாளர் அன்னை மக்கிலோப் அவர்களின் பரிந்துரையால் அற்புதமாகக் குணமடைந்தார். அவுஸ்திரேலியா நாட்டின் சிண்டாலே என்ற இடத்தைச் சேர்ந்த 66 வயதான என்னும் பெண்மணி 1993ம் ஆண்டு தொடக்கம் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். இவ் அற்புதத்தை இம் மாதம் 11ம் திகதி அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி என்னும் இடத்தில் அமைந்துள்ள அருளாளர் அன்னை மேரி மக்கிலோப் நினைவுச் சிற்றாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கத்லீன் இவான் வெளிப்படுத்தியுள்ளார்.
கத்லீன் இவான் தன் வாழ்க்கையை இவ்வாறு விபரிக்கின்றார்: நான் என்னுடைய 16வது வயது முதல் புகைபிடிக்கம் பழக்கத்தைக் கொண்ருந்தேன். 1990ம் ஆண்டு அப் பழக்கத்தினைக் கைவிட்டேன். மூன்று ஆண்டுகளின் பின்னர் எனக்கு வலது பக்க ஈரலில் புற்றுநோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. இது உடலின் பல பாகங்களுக்கும் விரைவாகப் பரவியது. சில மாதங்களின் பின்னர் மூளையில் இன்னொரு கட்டி இருப்பதாக வைத்தியர்கள் கூறினார்கள். ஆனால் எனக்கு அளிக்கப்பட்ட எல்லாச் சிறப்பு சிகிச்சைகளும் பயனற்றுப் போயின. நான் தொடந்து வாழக்கூடிய கால எல்லை இரண்டு மாதங்கள்தான் என திட்டமாக வைத்தியர்கள் கூறிவிட்டார்கள். நான் வழக்கமாக ஆலயம் செல்லுவேன். முழந்தாட் படியிட்டு செபிப்பதைப்பற்றியோ அல்லது திருப்பலின் மேன்மை பற்றியோ நான் எனது கடந்தகால வாழ்க்கையில் அதிக நாட்டம் கொள்ளவில்லை.ஆனால் நான் செபத்தில் ஆழமான விசுவாசம் கொண்டவள், ஆகவே கடவுளிடமே எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தேன். அதன் பின் தொடர்ந்து வந்த நாட்கள் எனக்கு மிகவும் வேதனையான நாட்களாக அமைந்தன. படுக்கையைவிட்டு ஒரு கணமேனும் எழுந்திருக்கவோ அசையவோ முடியவில்லை. எனது கணவரே எனக்கு எல்லாவிதத்திலும் உதவி புரியவேண்டியிருந்தது. இந் நேரத்தின் எனது நண்பரொருவர் அருளாளர் அன்னை மக்கிலோப் அவர்களின் படத்தையும் ஒட்டிய துணியையும் அங்கு அச்சிடப்பட்ட செபத்தினையும் புனித சூசையப்பர் சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகளிடமிருந்து பெற்றுத் தந்தார். இரண்டு வாரங்கள் களித்து தியானமொன்றில் பங்கு பற்றினேன். 10 மாதங்கள் கழித்து என்னைப் பரிசோதித்த வைத்தியர்கள் என்னிடம் புற்று நோய்க்கான அடையாளங்களோ அல்லது அறிகுறிகளோ இல்லை என்று ஆச்சரியத்துடன் கூறினர். ஆகவே இது அன்னை மக்கிலோப் மூலமாக ஆண்டவா என்னைக் குணப்படுத்தியுள்ள மாபெரும் அற்புதமாகும்.
|