திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பரின் இலங்கைக்கான பிரதிநிதி அதி மேன்மைமிகு பேரருட் கலாநிதி யோசப் ஸ்பிரித்தி ( 2010.01.08) வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை மன்னார் பிரதான பாலத்தடியில் வைத்து மன்னார் மக்கள் வரவேற்று ஊர்வலமாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் நேற்று மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள பிரமாண்டமான வழிபாட்டு மண்டபத்தினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இரா.யோசேப்பு ஆண்டகையோடு இணைந்;து ஆசீர்வதித்து திறந்து வைத்தார். அதன்பின் நடைபெற்ற நற்கருணை வழிபாட்டிலும், கலைநிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் பெருந் தொகையான குருக்கள், துறவிகள், இறைமக்கள் கலந்து கொண்டனர்.
அதி மேன்மைமிகு பேரருட் கலாநிதி யோசப் ஸ்பிரித்தி இன்று காலை (2010-01-09) தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்த பின் பேசாலை, தோட்டவெளி ஆகிய பங்குகளுக்குச் சென்றார். இன்று மதியம் அவர் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் , துறவிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். அவர் இன்று மாலை வன்னிப் பகுதிக்கச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தார்
|