Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு.
 (2010.02.07)

முன்னுரை.

யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? ,  இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்.

அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! வரங்களை வாரி வழங்கும் இயேசுவின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று நாம் அனைவரும் ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு தினத்தில் இயேசுவின் பாஸ்காப் பலியைக் கொண்டாட ஒன்று கூடி நிற்கின்றோம்.

நம்மை அழைக்கும் இறைவன் தமது அருள் நலன்களால் நம்மை நிரப்புகின்றார். மடிந்து விட்டது என்று நாம் எண்ணும் போது முளைக்கச் செய்பவர் இறைவன். இல்லை என்பது இறைவனிடம் இல்லை. தமது வார்த்தையால் நமக்கு வளமூட்டுகின்றார், நம்மை வாழ வைக்கின்றார். இறைவனுடைய வார்த்தை ஆற்றல்மிக்கது, சக்தி வாய்ந்தது என்னும் உண்மைகள் நமக்கு இன்றைய செய்தியாகத் தரப்படுகின்றது.

எனவே நாம் நம்பிக்கையற்று வாழும் நிலையிலிருந்து விடுபட்டு இறைவனில் நம்பிக்கை கொள்ளுவோம். இறையரசின் வீரர்களாக நாம் மாறுவோம், கிறிஸ்துவுக்கே முன்னுரிமை கொடுப்போம். சுயநலம் மறந்து திருச்சபைக்கும், அயலவருக்கும் நிபந்தனையின்றிப் பணி செய்ய முன்வருவோம்: இறையன்பைப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக மாறுவோம். இந்தச் சிந்தனைகளை ஆழமாக உள்ளத்தில் இருத்தியவர்களாக இறைவனுக்கு நன்றி கூறி விசு வாசத்தோடு இறைவரம்; கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

இதோ. அடியேன் என்னை அனுப்பும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6:1-8

உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந் திருப்பதை நான் கண்டேன்: அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்: ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன: ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்: இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்: மற்ற இரண்டால் பறந்தனர்.

அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து:  ;படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்: மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது ; என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்ள் அசைந்தன: கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

அப்பொழுது நான்:  ;ஐயோ, நான் அழிந்னே;. ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்: தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்:  படை களின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே ; என்றேன்.

அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்;கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு,  ;இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது: உன் பாவம் மன்னிக்கப்பட்டது, ; என்றார்.

மேலும்  ;யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? ; என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு,  ;இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும் ; என்றேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

பதிலுரைப்பாடல் திபா: 138: 1-5, 7-8.

பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்: பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.பல்லவி

ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் ப+வுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்: ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!பல்லவி

உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு: உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர்கள் போதித்ததையே நாங்கள் பறைசாற்றுகிறோம். நீங்களும் நம்புகிறீர்கள்:
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15:1-11

சகோதரர் சகோதரிகளே!
சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழை கிறேன்.  அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்: அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்: இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.  மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப் பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர் களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர். பிறகு யாக்கோ புக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன்.  திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதி யற்றவன்.  ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகி விடவில்லை.  திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன்.  உண்மையில் நானாக உழைக்கவில்லை: என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது.

நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   மத் 4:19

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு அவர்களைப் பார்த்து, ; என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ; என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அனைத்தையும் விட்டுவிட்டு சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:1-11

ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார்.  திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார்.  மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது.  அதில் இயேசு ஏறினார்.  அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, ;ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ; என்றார். சீமோன் மறுமொழியாக, ;ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை: ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ; என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந் திரளான மீன்களைப் பிடித்தார்கள்.  வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள்.  அவர் களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள்.  அவை மூழ்கும் நிலையி லிருந்தன.

இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ;ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ; என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதி யான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.  இயேசு சீமோனை நோக்கி, அஞ்சாதே: இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ; என்று சொன்னார்.

அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

1. எங்கள் வலிமையும், வாழ்வுமாகிய இறைவா! வேதனைகளும், துன்பங்களும், இழப்புக் களும், வன்முறைகளும், அழிவுகளும் பெருகிவிட்ட இன்றைய உலகிலே உமது அருட் பணியைத் தொடர்ந்தாற்றும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் நீர் தூய ஆவியின் கொடைகாளால் நிரப்பி, அவர்களை வலுப்படுத்தி, அவர்கள் அனைவரும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாபெரும் சக்திகளாக விளங்கச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஞானத்தின் ஊற்றே இறைவா! இந்நாட்களிலே எமக்கு நீர் பல்வேறு விதமாக வெளிப் படுத்தும் உமது செய்தியையும் , விருப்பத்தையும் , சித்தத்தையும் நாம் சரியான விதத் திலே புரிந்துகொண்டு உம்மோடும் , எம் உறவுகளோடும் ஒப்ர்ரவாகி , மனமாற்ற மடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.விடுதலையின் தெய்வமே இறைவா! இன்று உலக நாடு முழுமையும்  இடம் பெயர்ந்து , அகதிகளாகி அல்லலுறும் அனைத்து மக்கள்மீதும் மனமிரங்கி அவர்களின் கண்ணீ ரைத் துடைத்து, அவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களிலே நிம்மதியாக வாழவும்: உலகிலே அடக்குமுறைகள் அழிந்து: அன்பும் , மனிதநேயமும் , நீதியும் நிலைபெறச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அன்புத் தந்தையே இறைவா! நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும் , உமது வார்த் தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் : எமது பிள்ளைகள் இறையுறவிலும் , ஒழுக்கத்திலும் , ஞானத்திலும் , கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும் ,செயற்படவும்  உமக்குப் பணிபுரிவதற்கு வேண்டிய நல்லுள்ளம் அவர்களிடம் உருவாகிடவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப் படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 Download

04.02.2010**********************பக்கம்....* 118---print

****************************************************************************************************************

பொதுக்காலம் 22ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 21ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 20ம் ஞாயிறு. தூய கன்னிமரியாயின் விண்ணேற்றப் பெருவிழா.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 18ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 17ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

All Head