Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com

2010.03..07

முன்னுரை.

இங்கே அணுகி வராதே: உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு: ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்"

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே! துன்பங்களைத் துடைத்து, அடிமைத்தன வாழ்வை அகற்றி மகிழ்ச்சியில் நம்மை நிலைப்படுத்தும்  இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.

மக்கள்படும் துன்பத்தையும், அவர்கள் எழுப்பும் அவலக் குரலையும், அவர்களின் துயரங்களையும் இறைவன் ஒருபோதும் சகித்துக்கொள்வதில்லை. மிகுந்த மனதுருக்கம் உடையவரான நம் தந்தையாம் இறைவன் நம் ஒவ்வொருவர் மீதும் கண்ணும் கருத்துமாக இருந்து முழுமையானதும், உலகம் தரமுடியாததுமான விடுதலையையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகின்றார். அவரே நம் வாழ்வின் அரணும், பாதுகாப்பும், கேடயமுமாக இருக்கின்றார் என்னும் உன்னத உண்மைகள் இன்றைய இறைவார்த்தைகளின் இதய நாதமாக இருக்கின்றன.

எனவே, இறைவனினடம் முழுமையாக நம்மை ஒப்படைத்து அவர் காட்டும் ஒளியிலும் , வழியிலும் நடப்போம். ஆவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்வோம். அவர் வழியாகவே முதலும், முழுமை யானதுமான அமைதியையும், விடுதலையையும் பெற்றுக் கொள்ள முயலுவோம். நம்மையே முழுவதும் ஒப்புக்கொடுத்துச் செபிப்போம்.

முதல் வாசகம்

இருக்கின்றவராக இருக்கின்றவர்; என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம். 31:1-8, 13-15

மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார்.  அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்ட வரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார்.  அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது.  ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்" என்று மோசே கூறிக்கொண்டார்.

அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார்.  ;மோசே, மோசே ; என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் "இதோ நான்" என்றார். அவர், "இங்கே அணுகி வராதே: உன் பாதங்களிலிருந்து மிதியடி களை அகற்றிவிடு: ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" என்றார். மேலும் அவர், "உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே"" என்றுரைத்தார்.  மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.

அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்: அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்: ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தி யரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.

மோசே கடவுளிடம், "இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல,  ;அவர் பெயர் என்ன? ; என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?" என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி,  ;இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே ; என்றார். 
 
மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம்,  ;இருக்கின்றவர் நானே ; என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்"" என்றார். கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "நீ இஸ்ரயேல் மக்களிடம்,  ;உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் ; என்று சொல்.  இதுவே என்றென்றும் என்பெயர்: தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்  திபா: 103: 1-4. 6-8, 11

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி:

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்: உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்: அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி:

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை: ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்: அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். பல்லவி:

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்: நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. பல்லவி:

 

இரண்டாம் வாசகம்

மோசேயோடு மக்கள் பாலை நிலத்தில் நடத்திய வாழ்க்கை நமக்கு அறிவு புகட்டும் படிப்பினையாக எழுதப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10:1-6,10-12

சகோதர சகோதரிகளே,
நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்.  நம் முன்னோர் அனை வரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர்.  அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்ற னர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலா லும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர்.  தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள்.  கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை.  பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அவர்கள் தீயன வற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர்.  இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர்.  அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.

அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகி ன்றன.  இறுதிக் காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   மத்4:17

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ;என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் கண்டுகொள் கின்றனர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:1-9

அக்காலத்தில்;
சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ;இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன்.  மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே.  அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன்.  மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள் ; என்றார்.

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ;ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார்.  அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ;பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்: எதையும் காணவி ல்லை.  ஆகவே இதை வெட்டிவிடும்.  இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ; என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ;ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்: நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி: இல்லையானால் இதை வெட்டிவிடலாம் ; என்று அவரிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.
  1. ஆசீரும் அருளும் நிறைந்த அன்புத் தந்தையே இறைவா! உமது பிரதிநிதிகளாக இருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் மக்களுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் : அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றவாகளாகவும், நல்ல வழிகாட்டிகளாகவும் இருந்து பணியாற்ற வேண்டிய பலத்தையும் உடல் நலத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  2. விடுதலையின் தெய்வமே இறைவா! அரசியல் கைதிகளாக இருக்கும் அனை வரையும் வீடுதலை செய்வதோடு: இன்று உலக நாடு முழுமையும்  இடம் பெயர் ந்து , அகதிகளாகி அல்லலுறும் அனைத்து மக்கள்மீதும் மனமிரங்கி அவர்க ளின் கண்ணீரைத் துடைத்து, அவர்கள் அனைவரும் தமது சொந்த இடங் களிலே நிம் மதியாக வாழவும்: உலகிலே அடக்குமுறைகள் அழிந்து: அன்பும், மனித நேயமும் , நீதியும் நிலைபெறச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

  3. ஞானத்தின் ஊற்றே இறைவா! இந்நாட்களிலே எமக்கு நீர் பல்வேறு விதமாக வெளிப்படுத்தும் உமது செய்தியையும் , விருப்பத்தையும் , சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும் , எம் உறவுகளோடும் ஒப்புர வாகி , மனமாற் றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  4. ஆறுதலின் ஊற்றே இறைவா! நோயுற்றும், வேலையின்றியும் இடம்பெயர்ந்தும் அகதிகளாயும், பல்வேறு குடும்பச் சுமைகளாலும், கடன் தொல்லையினாலும் வேதனைப்படும் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இவர்களின் துன்ப துயரங் களைப் போக்கி நிலையான வேலையையும் நிம்மதியான இருப்பிடத்தையும் வழங்கிக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Download

03.03.2010**********************பக்கம்....* 123---print

****************************************************************************************************************

பொதுக்காலம் 22ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 21ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 20ம் ஞாயிறு. தூய கன்னிமரியாயின் விண்ணேற்றப் பெருவிழா.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 18ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 17ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

All Head