Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com

2010.08.01

முன்னுரை.

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்: அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.
இன்று பொதுக் காலம் பதினெட்டாம் ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திடும் வாழ்க்கை மாற்றத்தையடைய இத் தினத்தில் நாம் ஆண்டவரின் சந்நிதானத்தில்  ஒன்று கூடியுள்ளோம்.

நாம் வாழவேண்டிய வாழ்க்கை நெறி எப்படிப்பட்டது என்பதனை இன்றைய நாளில் மீண்டும் இறைவன் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். ஒருவரோடு ஒருவர் பொய் பேசக்கூடாதெனவும். ஏனெனில் நாம்; பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கின்றோமென்றும். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது என்னும் நமது நிலைப்பாட்டை மீளவும் இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே நாம் உலகப்பொருட்களில் பற்று வைக்காது. இறையரசையும், இறைவனுக்கு ஏற்புடையதையும் தேடுவதில் ஆர்வமுள்ளவராயிருக்கும் நல்மனத்தை இறைவன் நமக்குத் தந்தருள வேண்டுமென்று செபிப்போம்.

முதல் வாசகம்

உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்.
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம். 1:2, 2:21-23

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்: வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். ஏனெனில், ஞானத் தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்: உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும் வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன? வாழ்நா ளெல்லாம் அவருக்குத் துன்பம்: வேலையில் தொந்தரவு: இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா: 90: 3-6. 12-14,17

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்: 'மானிடரே! மீண்டும் புழுதியாக்குங்கள்' என்கின்றீர். ஏனெனில, ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.பல்லவி:

வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்: அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்: அது காலையில் தளிர்த்துப் ப+த்துக் குலுங்கும்: மாலையில் வாடிக் காய்ந்து போகும்.பல்லவி:

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்: அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஆண்டவரே, திரும்பி வாரும்: எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.பல்லவி:

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்: அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!பல்லவி:

இரண்டாம் வாசகம்.

மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய  திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5,9-11

சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

ஆகவே உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல் களை யும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள்  என்றும் வேறுபாடி ல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. மத் 5:3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:13-21

அக்காலத்தில்
கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதர ருக்குச் சொல்லும்  என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவரா கவோ அமர்த்தியவர் யார்? என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, எவ்வகைப் பேராசைக்கும் இடங் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்.  மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது  என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே! என்று எண்ணினான். ஒன்று செய்வேன் என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்: அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன் . பின்பு, என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன நீ ஓய்வெடு: உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்  என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்.  அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?  என்று கேட்டார். கடவுள் முன்னிலை யில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே  செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடு கின்றோம் : தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, முழுமையாக உம்மையும், உமக்கு ஏற்புடை யவற்றையும் தேடவும், வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு ஞானத்தோடு விடையளித்து வரிகாட்ட வேண்டிய சக்தி யையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  2. தலைமுறைதோறும் எங்கள் புகலிடமான தந்தையே! எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்: அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்: அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! என்னும் எங்களின் இதய ஏக்கத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

  3. நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும் தந்தையே! உலகப்போக்கிலான இயல்பாம் பரத்தைமை, ஒழுக்கக் கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிட்டு, ஒருவரோடு ஒருவர் பொய் பேசாது, பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்து விட்டு, புதிய மனித இயல்பை அணிந்துகொண்டு வாழ்வதற்கு வேண்டிய நிறையருளைத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  4. நாம் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், எம் உயிரைக் காக்கின்றவரும்: எம் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றவருமான ஆண்டவரே! வலுவிழந்து, வாழ்விழந்து, வேதனைகளோடு வாழ்ந்து கொண்டிருக் கும் எம் தமிழ் மக்கள் மீது மனமிரங்கி: நீரே அவர்களின் விடுதலைச் சக்தியாக இருந்து, அவர்க ளின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


பதிவிறக்கம் செய்யவும்.

28.07.2010**********************பக்கம்....* 145---print

****************************************************************************************************************

பொதுக்காலம் 22ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 21ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 20ம் ஞாயிறு. தூய கன்னிமரியாயின் விண்ணேற்றப் பெருவிழா.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 18ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

பொதுக்காலம் 17ம் ஞாயிறு.   ******  * விரிவாக..>>

All Head