JesuTamil.ch

viewers = 1023
ஆன்மிக அறிவுப் போட்டிகளின் பெறுபேறுகள்- 2019

இறை இயேசுவில் அன்பானவர்களே!
19.10.2019 நடந்து முடிந்த ஆன்மிக அறிவுப் போட்டிகளில் பங்கேற்ற சகல போட்டியாளர்களையும் பாராட்டுகிறேன். நாளாந்த பாடசாலைக்கல்வி வேலைப்பளுக்கள் மத்தியிலும் ஆர்வமாய் போட்டிகளின் விடயப்பரப்புகளை ஆயத்தப்படுத்தி போட்டிகளில் கலந்து ஆன்மிக அறிவில் ஊட்டம் பெற்ற பிள்ளைகளே! பிள்ளைகளை ஊக்குவித்த பயிற்றுவித்த பெற்றோர்களே! உங்கள் முயற்சிகள் மெச்சிதலுக்குரியவை. போட்டிகளின் பெறுபேறுகளை கீழுள்ள பட்டியலில் காணலாம்.
பங்கேற்பும் ஆன்மிக அறிவில் வளர்வதுமே தலையானவை. பெறுபேற்று நிலை கண்டு உயர்வு தாழ்வு மனநிலை கொள்ள வேண்டாம். தொடர்ந்து முயலுங்கள். இறையறிவில் வளருங்கள்.
இறையாசீருடன்
அருட்பணி. சூ.டக்ளஸ் லோகு

View Destop


View Mobile